fbpx
Others

 மணிப்பூர் விவகாரம்:மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

, மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையேமணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி-மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை, நேற்று நாடாளுமன்றத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கின.  இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. மக்களவை இன்று கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை மீண்டும் வரும் திங்கள் கிழமை கூட உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close