மணிப்பூரில் மீண்டும் வன்முறை, ஊரடங்கு..?
மீண்டும் எழும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இவற்றை “தீவிரவாத நடவடிக்கைகள்” என்றார்.இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை அலை எழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. சில மாதங்களாகத் தணிந்திருந்த வன்முறை மீண்டும் வெடித்துள்ளதால், கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை (இன்று) நடந்த சண்டையில் 5 பேர் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இருதரப்பு துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் மரணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் இயல்புநிலைத் திரும்பும் வரை இந்த அவசரநிலை நீடிக்கும் என COCOMI தரப்பில் கூறப்பட்டுள்ளது.
