fbpx
Others

மணிகண்டன்—-, லாரி மோதிவிபத்தில் மூளைச்சாவு…..?

மணிகண்டன் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது

சேலம் மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன்,வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன்.வயது 26.இவர் சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார்.இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் குடும்பத்தை மணிகண்டன் தான் வழிநடத்தி வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, லாரி மோதி படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்த நிலையில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர். அப்போது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசித்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு மருத்துவர்கள் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலமாக எடுத்தனர்.பின்னர் இருதயம், கண்கள், இருதயவாழ்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பான தகவலையும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இருதயம் மற்றும் நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மணிகண்டனின் சகோதரி உடல் உறுப்புகள் எடுத்துச் சென்ற பெட்டியை பிடித்துக் கொண்டு கதறி அழுந்தது பார்த்தவர்களின் கண்ணீரை வரவழைத்தது…..

Related Articles

Back to top button
Close
Close