fbpx
Others

ப.சிதம்பரம்–ஜிஎஸ்டி சீர்திருத்தம்—தாமதமான முடிவு..

p chidambaram gstஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு எனும் தீபாவளி பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி வரிகள் இரு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி சீர்திருத்தம், பொருட்கள் மீதான வரி குறைப்பு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் தாமதம் என்பது ஏற்க முடியவில்லை.தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை முதலிலேயே அறிமுகப்படுத்தியிருக்கவே கூடாது. இதை நீக்கக் கோரி நாம் 8 ஆண்டுகளாக கதறி வந்தோம். ஆனால் நமது கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. மந்தமான பொருளாதார வளர்ச்சியா, இல்லை வீட்டுக் கடன் அதிகரிப்பா, வீட்டு சேமிப்பு குறைவதா, பீகாரின் தேர்தலா, டிரம்பின் வரி விதிப்பா, அல்லது இவை எல்லாமுமா என அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இது மக்களுக்கு தீபாவளிப் பரிசாக அமையும் என கூறியிருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து அப்படியே 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மருத்துவ காப்பீடுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.அதாவது, இந்த துறையில் தனிப்பட்ட மருத்துவ காப்பீடுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. முன்னர் இதற்கு 18% வரை வரி இருந்தது. அதேபோல தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், அனைத்து நோயறிதல் கருவிகள் & வினையூக்கிகள், குளுக்கோமீட்டர் & சோதனை கருவிகள், பார்வை திறன் கண்ணாடிகள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 12% ஜிஎஸ்டி இருந்தது. இந்த முறை 5% ஆகmedical insurance GST குறைக்கப்பட்டிருக்கிறது.மற்ற பொருட்களை பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், நூடுல்ஸ், பாஸ்தா, உணவுப் பொருட்கள், ரொட்டிகள், சைக்கிள்கள், பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியற்றுக்கு 12 மற்றும் 18 சவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட நாப்கீன்கள், மிக்சர், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் பாட்டில்கள், டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றுக்கும் 12 மற்றும் 18 சதவிகிதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றும், அது மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close