fbpx
Others

போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

CM MK Stalin Warns Police Strict Action Against Dereliction of Dutyகாவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாகஇருக்கும்எனகாவல்துறைஅதிகாரிகளுக்குமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்எச்சரிக்கைவிடுத்துள்ளார்தமிழ்  நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர், காவல்துறைதலைமைஇயக்குநர்உள்ளிட்டகாவல்துறைஉயர்அதிகாரிகள்கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின், காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாககையாண்டுவருவதையும்,இந்தஅரசால்எடுக்கப்பட்டநடவடிக்கைகள்மூலம்தமிழ்நாட்டின்தொழில்வளர்ச்சி,தொழில்முதலீடு,புதியதொழிற்சாலைகள்,புதியவேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு, அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாகவாழ்கின்றமாநிலமாகதமிழ்நாடுதிகழ்கின்றதுஎன்றால்அதற்குகாவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாய் விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close