fbpx
Others

போர் மிரட்டல் விடுத்த சீனா—இந்தியாகளத்தில் சந்திக்க தயார்?

போர் மிரட்டல் விடுத்த சீனா.. களத்தில் சந்திக்க தயார்? பயிற்சியில் இந்தியா! எல்லையில் கடும் பதற்றம்!
  • ட்டாநகர்: இந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்த நிலையில், அந்நாட்டு எல்லையை ஒட்டி அதிதீவிர போர் பயிற்சியில் இந்திய விமானப் படை ஈடுபடவுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சீனாவிடம் இருந்து ஒரு போர் அறிகுறி தெரிந்தாலே, உடனடியாக களத்தில் இறங்கிவிடும் தயார் நிலையில் விமானப்படையை வைத்திருப்பதற்காக இந்தப் போர் பயிற்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.ரஷ்யாவிடம் இருந்து அண்மையில் வாங்கிய அதிபயங்கரமான எஸ் 400 ஏவுகணைகள், பிரான்ஸிடம் இருந்து பெறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த போர் ஒத்திகை நடைபெறவுள்ளது  .தொடரும் பதற்றம்

 அருணாச்சலப் பிரதேசத்தின் மீது நீண்டகாலமாக கண் வைத்துள்ள சீனா, கடந்த டிசம்பர் மாதம் அங்குள்ள தவாங் செக்டார் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீனப்படையினர் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியாவும், சீனாவும் லட்சக்கணக்கான ராணுவத் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழல் தொடர்ந்து வருகிறது.இந்தச் சூழலில்தான், அருணாச்சல் எல்லையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ வீரர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நேற்று உரையாற்றினார். அப்போது அவர், சீனப் படையினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், எதிரிகளின் தாக்குதலை சமாளித்து திருப்பி தாக்கும் தயார்நிலையை உறுதிசெய்யும்படியும் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.களத்தில் இறங்கும் இந்தியா..

சீன அதிபரின் இந்த பேச்சானது, இந்தியாவுக்கு எதிரான போர் பிரகடனமாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மேலும், அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்ற நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் சீனா, எப்போது வேண்டுமானாலும் அதிரடி தாக்குதலை நடத்தலாம் என இந்திய உளவு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், சீன எல்லையை ஒட்டி அதிதீவிர போர்பயிற்சியில்இறங்கஇந்தியவிமானப்படைதயாராகியுள்ளது.இன்னும் ஓரிரு தினங்களில் இந்த போர் பயிற்சி தொடங்கும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாமல் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து விமானப்படை தளங்களிலும் போர் விமானங்களை இந்தியா நிறுத்தி வருகிறது. மேலும், இந்தப் போர் பயிற்சியில் எஸ் 400 ஏவுகணை, ரஃபேல் போர் விமானங்கள், எஸ்யு 30 ஃபைட்டர் விமானங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தியாவின் இந்த திடீர் போர் பயிற்சி அறிவிப்பானது சீனாவை மேலும் கோபப்படுத்தியுள்ளதாக சர்வதேச உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Related Articles

Back to top button
Close
Close