போத்தனூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் மோசடி !

கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 18 லட்சம்மோசடி செய்த தம்பதி மீது போத்தனூர் போலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.கோவை, வெள்ளலூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆஸ்டியன் ராஜ்குமார் (33). இவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வருகிறார். ஆஸ்டியன் ராஜ்குமார் தனது கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வெள்ளலூரில் உள்ள திருமுருகன் என்பவரது கைப்பேசிக் கடைக்குச் சென்று வந்தார். அப்போது அதே கடைக்கு வந்த போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த சக்திவேல் (43) என்பவர் பழக்கமாகி உள்ளார். மேலும், தான் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருவதாகக் கூறி தன்னை சக்திவேல் அறிமுகப்படுத்திக் கொண்டார்.அப்போது தானும் தனது நண்பரும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருவதாக சக்திவேலிடம் ஆஸ்டியன் ராஜ்குமார் கூறியுள்ளார். அப்போது சக்தி வேல், தலா 9 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருகிறேன். 10 நாட்களில் பணி நியமன ஆணை வந்து விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ஆஸ்டியன் ராஜ்குமார்,தனக்கும்,தன்நண்பருக்கும்சேர்ந்து18லட்சத்தைசக்திவேலிடம்,கொடுத்துள்ளார். இந்நிலையில், பணி நியமன ஆணை வந்துவிட்டதாகக் கூறி ஒரு கடிதத்தை சக்திவேல் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆஸ்டியன் ராஜ்குமார். சென்னை பொதுப்பணித் துறை அலுவலகத்துக்குச் சென்று அதைக் காண்பித்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆஸ்டியன் ராஜ்குமார். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போத்தனூர் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில் மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை மணி மகன் சக்திவேல் (43), அவரது மனைவி ஜெயசித்ரா (34) என்பதும். அவர்கள் கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகரில் தங்கி இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா மீது போத்தனூர் போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்..