fbpx
Others

போதையில்–அரசுப் பேருந்தை இயக்கினால்கடும் நடவடிக்கை

சென்னை: ஓட்டுநர், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை  மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் கூறியுள்ளது . ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் பணி நேரத்தின்போது மது அருந்திவிட்டு பேருந்துகளை இயக்குவதாகவும் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சிலர் பணியின் போது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துனர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரியக் கூடாது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் மேற்கொள்ளப்படும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பணியாளர்கள் மேற்படி குற்றத்திற்கான பின் விளைவுகளை அறிந்து பணியில் ஒழுங்கீனத்திற்கு இடம் கொடுக்காமல் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close