fbpx
Others

போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா.

தேனி மாவட்டம் போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 265 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போடிநாயக்கனூர் ஜமீன்தார் வடமலைமுத்துராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அஇஅதிமுக தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசந்திரன் தேனி அமைப்பு சாரா அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் போடி குறிஞ்சிமணி ஆகியோர் போடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .அதன் பின்னர்நாயக்கர் சமுதாய மக்கள் நடத்திய மாபெரும் பேரணியில்
தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நாயக்கர் சமுதாயத்தை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலை முன்பு பொங்கல் வைத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.போடி நாயுடு நாயக்கர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலகுரு தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தேவராட்டம் ஆடி கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.ஊர்வலத்தில் மத்தியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து கையில் வாளுடன் ஒருவர் நடந்து வந்தது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.விழாவில் தேனி மாவட்ட நாயக்கர் சங்க கெளரவ தலைவர் நாராயணசாமி ஒருங்கினைப்பாளர் தேனி வீரராஜ் மாவட்ட செயலாளர் தேனி சுப்புராம் மாவட்ட பொருளாளர் ஆண்டிபட்டி சுப்புராஜ் ஏற்பாடுகளை நாயுடு நாயக்கர் மத்திய சங்க நிர்வாகிகள் தலைவர் கலைசெல்வன் செயலாளர் சுருளிராஜ் துனைதலைவர் பாண்டி துனை செயலாளர் பிச்சைமணி மற்றும் வீரகண்ணன் பொருளாளர் மணிகண்டன் உட்பட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close