fbpx
Others

போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில்வே நிலையத்தின் அவலநிலை !.. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தேனி மாவட்டத்திற்கு , மிகுந்த பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஏதோ பிச்சை போடுவது போல இந்த போடிநாயக்கனூர் வரை இரண்டு இரயில்கள்களை விட்டுள்ளது மத்திய அரசு! இன்னும் சென்னைக்கு திருச்சி வழியாக எழும்பூர் செல்லும் இரயில்கள், கோவைக்கு மற்றும் தூத்துக்குடி, இராமேஸ்வரம் செல்லும் இரயில்கள்களை போடிநாயக்கனூர் வரை வந்து செல்வதற்கு விரைவில் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் போராடி வருகின்ற வேளையில், இருக்கின்ற இந்த போடிநாயக்கனூர் இரயில் நிலையம் பயணிகள் அமர்ந்து செல்ல இருக்கைகள் போதிய அளவு இல்லை! இதில் இருக்கின்ற இருக்கைகளில் சில இருக்கைகள் சிதிலமடைந்து இருக்கின்றன. பிளாட்பாரம் இரு பக்கங்களிலும் இருந்த பூச்செடிகள், புல் தரைகள் அனைத்தும் தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு இன்றி குப்பைகளாக காட்சி தருகிறது! இந்த காய்ந்த குப்பைகள் மட்டும் அல்ல, இவற்றிற்க்குள் கிழிந்து போன சேலை, மற்றும் துணிகள் வேறு! இதென்ன இரயில் நிலையமா ? அல்லது சமூக விரோதிகள் வந்து செல்வதற்கு ஆன இடமா என்று தெரியவில்லை ? இவற்றை எல்லாம் சுத்தம் செய்து பராமரிப்பு செய்ய பணியாளர்களை இரயில்வே நிர்வாகம் நியமனம் செய்யவில்லையா ? இந்த குறைகளை யார் நிவர்த்தி செய்வது? இவற்றை உடனடியாக இரயில்வே நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு இக் குறைபாடுகளை சரி செய்து தர வேண்டும் என்று தேனி மாவட்ட வாழ் பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ? பொறுத்துஇருந்துபார்ப்போம்!!!……….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close