fbpx
Others

போக்குவரத்து விதிமுறைகள் மீறய – வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு.

. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி குற்றங்களை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகனஆய்வாளர்கள், இணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகியோர்தமிழகம்முழுவதும்இன்றுவாகனதணிக்கையில்ஈடுபட்டு வருகின்றனர். அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்துதுறை அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் இணை போக்குவரத்து ஆணையர் முத்து உத்தரவின்படி செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், ஸ்ரீபெருமந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஹாமிதாபானு, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீபெருமந்தூர் போக்குவரத்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணன், சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அருணாச்சலம், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து செல்வி, திருக்கழுக்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முரளி மற்றும் வட்டார போக்குவரத்து ஊழியர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையின்போது, சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள், அதிக பாரம் ஏற்றிவந்த வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close