fbpx
Others

போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி….? பொதுமக்கள் மன உலைச்சல்….?

போக்குவரத்து போலீசார் புதிய அதிரடி இஷ்டத்துக்கு இனி நம்பர் பிளேட் வைக்க முடியாது: மாற்றிவிட்டு வந்தால் தான் வாகனம் கிடைக்கும்   சென்னையில் குற்ற செயல்களை தடுக்க வாகன நம்பர் பிளேட் குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து போலீசார், விதிமுறை மீறிய வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளைஉடனடியாக மாற்றி அனுப்பி வைக்கின்றனர். சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்கள் திருடிய வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதை தடுக்க போக்குவரத்து போலீசார் தற்போது சென்னையில் நம்பர் பிளேட் சரியில்லாத வாகனங்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திலேயே நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டு வரும்படி நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் நாட்களில் வழக்குப்போடுவதோடு நம்பர் பிளேட் மாட்டினால்தான் அனுப்புவேன் என்று போலீசார் வாகனங்களை விட மறுக்கின்றனர். விடுமுறை நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் பூட்டியிருக்கின்றன. அவர்கள் நம்பர் பிளேட்டுக்கு எங்கு செல்வோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மோட்டார் வாகன சட்ட விதிமுறையின் படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும் அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். 70 சிசிக்கு குறைவான என்ஜின் திறன்கொண்ட இருசக்கர வாகனங்களில் முன்னெழுத்துக்களின் உயரம் 15 மில்லி மீட்டரிலும், அதன் தடிமன் 2.5 மில்லி மீட்டரிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.அனைத்து இருசக்கர வாகனங்களில் பின் எழுத்துக்களில் உயரம் 35 மில்லி மீட்டரிலும் தடிமன் ஏழு மில்லி மீட்டரிலும் இதன் இடைவெளி 5 மில்லி மீட்டரும் இருக்க வேண்டும். ஆனால், பலரும் தங்களது நம்பர் பிளேட்டில் ஆன்மிகம், அரசியல், சினிமா போன்றவற்றை மையப்படுத்தி நம்பர் பிளேட்களை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்போது சென்னையில் போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். எந்த வண்டியில் நம்பர் பிளேட் சரி இல்லாமல் போலீசார் பிடிக்கின்றனரோ அந்த வண்டிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.மேலும், அருகில் உள்ள ஸ்டிக்கர் கடைக்குச் சென்று நம்பர் பிளேட்டை அரசு நிர்ணயத்துள்ளபடி மாற்றி வடிவமைத்து மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து காண்பித்து, அதனை போக்குவரத்து போலீசார் போட்டோ எடுத்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு அப்டேட் செய்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகளும் எதற்கு பிரச்னை என நம்பர் பிளேட்டை மாற்றி அபராத தொகையை செலுத்தி விட்டு சென்று விடுகின்றனர். போக்குவரத்து போலீசார் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஹெல்மெட் என்றால் அதற்கு ஒரு நாள் முழுவதும் ஹெல்மெட் கேஸ் அதிகமாக போடுகின்றனர். அதேபோன்று, சாலை விதிகளை மீறும் வண்டிகளை பிடிக்க ஒரு நாள் முழுவதும் தனி கவனம் செலுத்தி அதிகப்படியான வழக்குகளை போடுகின்றனர். அவ்வாறு நம்பர் பிளேட் விவகாரத்திலும் ஒருநாள் முழுவதும் வழக்கு பதிவு செய்யும்போது சென்னையில் மட்டும் குறைந்தபட்சம் 400 இருந்து 500 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு வாரமும் இதனை படிப்படியாக சரி செய்து வாகன ஓட்டிகளிடம் நம்பர் பிளேட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்…….அதேநேரத்தில் பண்டிகை நாட்களில் இதுபோன்று அபராதங்களை போலீசார் விதிப்பதை தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கலன்று இதுபோன்று நடவடிக்கைகளில் இறங்குதை உயர் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பல உயர் அதிகாரிகள் வடமாநில அதிகாரிகளாக உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் திருநாளைப்பற்றி புரிதல் இல்லை. இதனால் அவர்கள் தமிழர் விழாக்கள் குறித்த புரிதலோடு செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   * மக்கள் ஒத்துழைப்பு அவசியம் நம்பர் பிளேட் பிரச்னையில் வழக்கு பதிவு செய்யப்படுவது குறித்து, புளியந்தோப்பு சரக போக்குவரத்து உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘‘அரசு நிர்ணயித்துள்ள புதிய நம்பர் பிளேட் விதிமுறையின்படி வாகன நம்பர் பிளேட்டை பொதுமக்கள் வடிவமைக்க வேண்டும்.இல்லையென்றால் வாகனங்களை போக்குவரத்து போலீசார் மடக்கி வழக்கு பதிவு செய்வார்கள்.  முன்பு போல அபராதம் கட்டிவிட்டு சென்று விட முடியாது கண்டிப்பாக சம்பவ இடத்திலேயே நம்பர் பிளேட்டை மாற்றி மீண்டும் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்….

Related Articles

Back to top button
Close
Close