பொன்னேரி-திமுக அரசை கண்டித்து தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.


பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கைது”யார் அந்த சார்``தி.மு.கஅரசுபதவிவிலகவேண்டும்எனகண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்திதிமுக அரசை கண்டித்து பொன்னேரியில் தடையை மீறி அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் பலராமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோரைபோலீசார் வலுக்கட்டாயமாககைது செய்து அழைத்துச் செல்ல முடியாமல் திணறினர்.ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் யார் அந்த சார், தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் கண்டன என கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பொன்னேரியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இரண்டு அரசு பேருந்துகள் இரண்டு போலீஸ் வாகனங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்களைகைதுசெய்தனர்.மீதமுள்ளவர்கள் அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். பலராமன்,பொன் ராஜா, கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விஜயகுமார், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டு அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.