fbpx
Others

பெரியார் மண்ணை விட்டு பிரிந்து செல்வது வருத்தமளிக்கிறது – ராகுல்

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணம் தமிழ்நாட்டில் இன்றுடன் நிறைவடையும் நிலையில்பெரியார் மண்ணை விட்டு பிரிவது வருத்தமளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.இந்திய ஒற்றுமை பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த பயணம் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை 3500 கிமீ தூரம் நடைபெறவுள்ளது. 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் இந்த பயணம் நடைபெறும். இந்நிலையில் இன்று தமிழ்நாடு எல்லையை கடந்து கேரள எல்லைக்குள் நுழைகிறார் ராகுல் காந்தி.  தமிழ்நாடு எல்லை தளச்சான்விளை பகுதியில் உரையாற்றிய அவர், இந்த பயணத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவை பாஜக, ஜாதி, மத, மொழி அடிப்படையில் பிளவு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நன்மை பிரதமர் மோடி செய்கிறார்.மேலும் ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என குற்றசாட்டிய அவர், இதற்கு முற்று புள்ளி வைக்கவே இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறினார். நாராயண குருவும் பெரியாரும் ஏழை மக்களுக்கு உழைத்தவர்கள் என கூறிய அவர், பெரியார் மண்ணில் இருந்து பிரிந்து செல்வது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close