பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் மவுனம் காப்பது ஏன்…?
அரசு நடவடிக்கை எடுக்குமா???பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் ஒரு உயிர் போகும் அபாயம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ராஜபுதுர் ஊரை செர்ந்ந ஜெயா 47 (கணவரை இழந்தவர்) என்பவருக்கு 2 மகன்கள்மூத்த மகன் பிரவின் (25) 2022 ல் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பகுதியில் வெல்டிங் பட்டரையில் வேலை பார்த்து வந்தார் அவர் அந்த பகுதியில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு நான்கு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிரிந்தார் கிட்டதட்ட நான்கு லட்சம் செலவு செய்த பிரவின் தாயார் தற்போது கடன் தொல்லையால் பரிதவித்து வருகிறார் அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சாலை விபத்து நிவாரணம் (இன்சூரன்ஸ் தொகை)மூன்று ஆண்டு ஆகபோகும் நிலையில் இதுவரை கிடைக்க வில்லை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் பலமுறை முறையிட்டும் இது வரை எந்த பயனும் ஏற்பட வில்லை கணவர் இல்லாமல் மகனை வளர்த்து அவரையும் தற்போது இழந்து விட்டு பரிதவிக்கும் ஏழை தாய்க்கு தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் காட்டும் இந்த அலட்சியம் இன்னோறு உயிரை பறிக்க போகிறதா ? சாமானிய மக்களுக்கு நீதி மறுக்க படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.