பென்னலூர்பேட்டை அரசினர்மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி….

திருவள்ளூர் மாவட்டம்ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 50 மாணவி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே சந்திரசேகர் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.ஒன்றிய செயலாளர்கள் மாணவர்களுக்கிடையே கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.அதன் பிறகு வருகின்ற தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என மாணவ மாணவிகளிடம் கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பேபி பாலாஜி பென்னலூர்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் துணைத் தலைவர் சீனிவாசன் எஸ்.எம்.சி தலைவர் கோபி மற்றும் எஸ்.எம்.சிநிர்வாகிகள்கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் எம்.என்.சுப்பிரமணி ராமலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் அம்மம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.