பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் நடப்பது என்ன…?
“Skip to main content Main navigationபெண்களுக்கு எதிரானஅனைத்துமகளிர்காவல்நிலையங்கள் Breadcrumbமுகப்பு தீப்பொறி பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் சி.மதிவாணன் கட்டுரைகள்…..
1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையம் துவங்கப் பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வரலாற்றில்இல்லாதமுன்மாதிரிஎன்றுவர்ணித்தார். பெண்கள்தங்களின்பிரச்சனைகளைஆண்காவலர்களிடம்வெளிப்படுத்துவதில்,காவல்நிலையத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் களைவதற் காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவும் திருமண உறவுப்பிரச்சனைகளை விசாரிப்பதற்காகவும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டதென்று 2013-2014 சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.ஆனால், பெண்களுக்கு எதிரான (பெண்ணின் அந்தரங்கமான தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட விசாரிக்க வேண்டிய) பிரச்சனைகள் குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையம் விசாரிப்பதில்லை. மிகப்பெரும் அளவுக்கு திருமண குடும்பப்பிரச்சனைகளை கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவே மாறிவிட்டது.சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு அனைத்து மகளிர் காவல்நிலையங்களிலும் நிலவுகிறது. ஆண் காவலர்கள்பயன்படுத்தும்பெண்கள்விரோத,பெண்களைஇழிவுபடுத்தும்வசவுகளும்பெண் களைத்தாக்குவதும்மகளிர்காவல்நிலையத்தில்சாதாரணமாகநடக்கின்றன.காவல்நிலையங்களில் வழக்கமாகக் காணப்படும் லஞ்ச லாவண்யத்திற்கு மகளிர் காவல்நிலையங்களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் இன்னும் கொடூரமானதாகக் கூட இருக்கிறது..“அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அனைத்தும் பெரும் பாலும் ஆண்களுக்கு ஆதரவான காவல் நிலையங் களாகவே இருக்கின்றன. விதிவிலக்கான நிகழ்வு களில் அல்லது வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும் பெண்ணிய அதிகாரிகளின் செயல்பாடுகளின்போது மட்டுமே பெண்களுக்கு ஆதரவாக அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்செயல்படுகின்றன. சமூகத் திலும் அரசியலிலும் நிலவும் ஆணாதிக்கமும் அதற்குத் துணையாக இருக்கும் அரசின் கொள்கைகளும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இந்தப் பெண்கள் விரோதப் போக்கிற்குக் காரணமாக இருக்கின்றன.மதுரையில் நடந்த ஒரு வழக்கில் பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவன் சிவராமன் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறார். காதலித்து மணந்த பெண்ணை அவர் கொடுமை செய்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி விரட்டி வந்துள்ளார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அப் பிரச்சனையில் தலையீடு செய்தது. குற்றம் செய்த கணவன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரினார். அனைத்து மகளிர் காவல்நிலையம் வழக்குப் பதிய மறுத்தது. இதற்கு எதிராக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கை வேறு ஒரு அதிகாரிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றினார். அந்த அதிகாரியும் வழக்குப் பதிவு செய்ய மறுத்தார். சமரச மையத்திற்கு அனுப்புவதாகச் சொன்னார். வழக்குப் பதிந்த பின்னர் சமரச மையத்திற்கு அனுப்பலாமே என பெண்ணின் தரப்பில் வைத்த கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. அதனைக் கண்டித்தும் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகச் செயல்படும் மகளிர் காவல் நிலையங்களைக் கண்டித்தும் 18.12.23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அஇமுபெக மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் வள்ளிமயில் தலைமை தாங்கினார். தோழர் ஹில்டா மேரி, குறி�