fbpx
Others

பெங்களூரு– இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்குஉற்சாக வரவேற்பு.

.பெங்களூருவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட இன்று (சனிக்கிழமை)வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். பெங்களூருவுக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதா முடிவு பிரதமர்மோடிகர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது மேலிட தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை கூட பா.ஜனதா நியமிக்கவில்லை.   இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு இதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் ஆளுக்கொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உட்கட்சி பிரச்சினையால் சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். இதனால், கர்நாடக பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  வரவேற்பு அளிக்க முடிவு எச்.ஏ.எல். விமான நிலையம் அருகேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி பிரதமருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இஸ்ரோ நிறுவனம் அருகில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்வதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் திறந்த வாகனத்தில் செல்லவில்லை என்பது உறுதியாகி இருப்பதால், பீனியா அருகே ஜாலஹள்ளி கிராசில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஒன்று சேர்த்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.விஞ்ஞானிகளை பாராட்டி கோஷம் பிரதமர் மோடி தன்னுடைய காருக்குள் இருந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைக்க இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருவதை கட்சி நிகழ்ச்சியாக கருத கூடாது என்றும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு பா.ஜனதா தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் பிரதமரை வரவேற்க வரும் தொண்டர்கள் தேசிய கொடியை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும், இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான்-3 வெற்றி குறித்து மட்டுமே கோஷங்களை எழுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close