fbpx
Others

பூமி மீது மோதவரும் விண்கல்லை பாதை மாற்றிய—-நாசா

வாஷிங்டன்: உலகின் முதல் கிரக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பூமியின் மீது மோதவரும் விண்கற்களை திசை திருப்பது எப்படி என்பதை ஆராய நாசா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக விண்ணின் மீது மோதியது. டார்ட் எனப்படும் இரட்டை சிறுகோள் திசைதிருப்புதல் சோதனை முயற்சியில் பூமியில் இருந்து சுமார் 11 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள டைமார்ஃபோஸ் என்ற விண்கல் மீது விண்கலத்தை மோத நாசா திட்டமிட்டது. அதன்படி இந்த திட்டத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டார்ட் விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் இருந்து நாசா விண்ணில் ஏவியது. சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட டைமார்ஃபோஸ் விண்கல் பூமியை நோக்கிய பாதையில் இல்லை என்றும் இந்த மோதலின் மூலம் பூமி பாதையில் விண்கல் நுழையாது என்றும் நாசா அறிவித்தது. 160 மீ. விட்டம் கொண்ட டைமார்ஃபோஸ் விண்கல் மீது மணிக்கு 24,000 கி.மீ. வேகத்தில் விண்கலத்தை மோத வைப்பதன் மூலம் அதன் சுற்றுவட்டார பாதையை மாற்றுவது நாசாவின் திட்டமாகும். அதன்படி இன்று அதிகாலை 4 மணி 44 நிமிடங்களுக்கு டைமார்ஃபோஸ் விண்கல்லை டார்ட் விண்கலம் வெற்றிகரமாக மோதியது. விண்கல்லை மோதும் காட்சியை படம்பிடிக்க விண்கலத்தில் பொருத்தப்பட்ட 14 கிலோ எடை கொண்ட கேமரா கொண்ட அமைப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே மோதல் நடைபெறும் ஸ்பார்ட்டில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தும் செய்யப்பட்டது. அது பிடிக்கும் படங்களை பூமிக்கு அனுப்பும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சில நாட்களில் பூமியை வந்துசேர உள்ளன. முதல் கிரக பாதுகாப்பு திட்டம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் கண்டு ரசித்தபடி இனி பூமியை விண்கற்கள் நெருங்கி வந்தாலும் அவற்றை நம்மால் வெற்றிகரமாக பூமியை நோக்கிய பாதையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்பதே சாத்தியம்.

Related Articles

Back to top button
Close
Close