fbpx
Others

பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல்—பேராசிரியர் பிராங்க் ப்ரெங்கர்.

பூமிக்கடியில் மாபெரும் கடல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிராங்க்பர்ட், பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மும்மடங்கு பெரியது என்று தெரிவித்தனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிமீ கீழே உள்ள பகுதி வரை புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது. அதற்கும் கீழ் 2900 கிமீ கீழே,பூமியின் உட்பகுதியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு - பூமியில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியது! விஞ்ஞானிகள் தகவல்  மிகக்கடினமான மேண்டில் பகுதி உள்ளது. சர்வதேச ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில், பூமியின் மேற்பரப்பிலிருந்து 660 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான வைரத்தை நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தது. அப்போது பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் நீர் இருப்பது நீண்ட காலமாக அது ஒரு கோட்பாடு ஆக மட்டுமே அறியப்பட்டது. நமது கிரகத்தின் நீர் சுழற்சி முறை பூமிக்கடியில் பெரும் பங்கு உள்ளது.   பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் உள்ள அடர்த்தியான தாதுக்கள் வாட்ஸ்லேயிட் மற்றும் ரிங்வுடைட் போன்றவை அதிக கொள்ளளவு நீரை சேகரித்து வைக்க முடியும். பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உள்ள மாறுதல் மண்டலத்தில் நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட 6 மடங்கு அதிக கொள்ளளவு நீரை சேகரித்து வைக்க முடியும் என்று பிராங்க்பர்ட்டில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிராங்க் ப்ரெங்கர் தெரிவித்தார். பூமியின் மேற்பரப்பிலிருந்து 660 கிமீ ஆழத்தில் உருவான வைரத்தை நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்த போது அதில் இருந்த வேதியியல் பொருட்கள், அதைக அளவில் ரிங்வுடைட் இருப்பது தெரியவந்தது. அது உருவான இடத்தில் நீர் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளன. இந்த வைரம் பூமிக்கடியில் மேண்டில் பகுதியில் உருவாகியிருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்மூலம், பிரெஞ்சு விஞ்ஞானியும் நாவலாசிரியருமான ஜூல்ஸ் வெர்னேவின் “பூமிக்குள் ஒரு கடல் உள்ளது” என்ற கருத்து நிரூபிக்க வாய்ப்புள்ளது. ஆகவே பூமிக்கடியில் வெறும் வறண்ட பகுதி மட்டுமே உள்ளது என்பது உண்மையல்ல, நீர் சத்து நிரம்பிய நீர்ப்பாறைகளாக அப்பகுதியில் இருக்கக்கூடும் என்கிறார் பேராசிரியர் பிராங்க் ப்ரெங்கர்.

Related Articles

Back to top button
Close
Close