fbpx
Others

பூந்தமல்லி அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

 பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற சித்திபுத்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம், பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த கோயில் நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன் தனிநபர்கள் ஆக்கிரமித்து, அங்கு வணிக வளாக கட்டிடங்கள் கட்டியுள்ளார். தகவலறிந்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு செய்து, கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்தவர்களிடம் காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கினர். எனினும், அவர்கள் காலி செய்யாமல் குடியிருந்து வந்ததால், கோயில் நில ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றவழிகாட்டுதலின்படிஇந்துசமயஅறநிலையத்துறைஅதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் சித்திபுத்தி விநாயகர் கோயில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில், இன்று காலை சித்திபுத்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலமாக ஊழியர்கள் அகற்றினர். பின்னர் கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில், ‘இது கோயிலுக்கு சொந்தமான நிலம். இங்கு அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனஅறநிலையத்துறைஅதிகாரிகள்எச்சரிக்கைபலகைவைத்துள்ளனர்.முன்னதாக, கோயில் நில ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அங்கு அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Articles

Back to top button
Close
Close