fbpx
Others

புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி-சிறப்பு செய்தி.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
புழல் ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பக்தி கொண்டாட்டம்.. சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.ஈ. பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் சிறந்து விளங்கி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடப்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் ராமரின் சிறப்புகளை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மாணவர்கள் பேசினார்கள். பரதம், நடனம், நாட்டியம், பாடல்கள் குழு நாடகம் நடைபெற்றது. பள்ளியின் தமிழ்த்துறை தலைவர் ஸ்ரீ ராமரை பற்றி சிறப்புரை ஆற்றினார் . மிகவும் சிறப்பாக புதிய எழுச்சியோடு நிகழ்ச்சி நடைபெற்றது.குறிப்பாக மழலைப் பள்ளி மாணவர்கள் ராமர், சீதா, அனுமன் வேடமிட்டு ராமரின் சிறப்புகளை பேசியும், பாடல்களை பாடியும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், மற்றும் பள்ளி நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கல்வி, விளையாட்டு மற்றும் நல் ஒழுக்கத்துடன் செயல்பட்டு வரும் புழல் ஜெயின் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.ஈ. பள்ளி புதிய எழுச்சியுடன் 2024 மற்றும் 2025 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை வேகமாக நடத்தி வருகிறது. தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேகமாக சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Related Articles

Back to top button
Close
Close