புழல் ஒன்றியம் முழுவதும். பொதுமக்களை சந்தித்து. குறைகளை கேட்டறிந்தார்.
போக்குவரத்துநெரிசலில் சிக்கித் தவிக்கும் வடகரை-மாதவரம் நெடுஞ்சாலையை. விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை! திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில். புழல் ஒன்றியம் முழுதும். பொதுமக்களை சந்தித்து. குறைகளை கேட்டறிந்தார். இதில் விளையாட்டு திடல், சமுதாயக்கூடம், புதிய பள்ளி கட்டிடங்கள், மின்விளக்கு, குடிநீர் பிரச்சனை குறித்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக வழங்கப்பட்டது.குறிப்பாக வடகரை. சிக்னல் முதல் மாதவரம் வரை செல்லும். மாநில நெடுஞ்சாலைதுறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள், பெட்ரோல், தண்ணீர் டேங்கர் லாரிகள், நெல், அரிசி மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் என கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில். 3000 மாணவர்கள் படிக்கின்ற அரசு பள்ளி,அரசு ஐ.டி.ஐ கல்லூரி, தனியார் பள்ளிகள் உள்ளன.மேலும் சில திருமண மண்டபங்கள். உள்ள பகுதி என்பதால். காலை, மாலை வேலைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனைப் போக்க. வடகரை முதல் மாதவரம் வரை. சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்.இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை போக்கவேண்டும்என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம். மற்றும். உள்ளாட்சித் துறை அதிகாரிகள். உடன் இருந்தனர்.