fbpx
Others

புதுவை– மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் …..?

புதுச்சேரி 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் வருகிற மார்ச் மாத முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. முழு பட்ஜெட் புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் இறுதியில் புதுவையில் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் 4 மாதங்களுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி வந்த பின்னர் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தார். இவ்வாறு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அதன் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியை செலவிடுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. மேலும் நிதியை முழுவதுமாக செலவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். திட்டக்குழு கூட்டம் இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். வருகிற 24-ந் தேதி மாநில திட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அரசின் வரவு-செலவு ஆராயப்பட்டு பட்ஜெட் தொகை இறுதி செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அனைத்து மாநிலங்களிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மாநிலம், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் புதுவை மாநிலத்தில் பட்ஜெட் தேதி அறிவிக்கப்படும். வருகிற மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.

Related Articles

Back to top button
Close
Close