fbpx
Others

புதுவை—சிறுமி கொலையை கண்டித்து இன்று பந்த்.

புதுவையில் சிறுமி கொலையை கண்டித்து இன்று எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டம் நடத்துவதால் பேருந்து, டெம்போ ஓடாது. பொதுத்தேர்வு எழுதுவோர் பாதிக்காமல்இருக்கபள்ளிவாகனங்கள்இயக்கலாம்என்என்றுகட்சிகள்குறிப்பிட்டன.புதுவைமுத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக் கியுள்ளது.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டப்பேரவை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை என பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து இன்று பந்த் போராட்டம் அறிவித்துள்ளன. இண்டியா கூட்டணி, அதிமுக பந்த் போராட்டத்தை தனித்தனியாக அறிவித்தன. அதேபோல் அரசு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு,சமூக அமைப்பினரும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.பந்த் போராட்டத்தால் இன்று புதுவையில் பேருந்துகள் ஓடாது. புதுவையை பொருத்தவரை தனியார் பேருந்துகளே அதிகம். சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.பேருந்துகள், டெம்போ, ஆட்டோக் கள் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெற வாய்ப்புள்ளதால் பாது காப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர். பல பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.பொதுத்தேர்வு நடப்பதால் அதை பாதிக்காமல் பள்ளி பேருந் துகள், வாகனங்கள் இயக்கலாம் என்றும் பந்த் போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட் கள், மருத்துவ வசதிகள் பெற தடையில்லை என்றும் குறிப்பிட்டனர்.பந்த் போராட்டத்தையொட்டி, திரையரங்குகளில் காலை, மதியம்இரு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close