fbpx
Others

 புதுவையில் தியாகி களுக்கு இலவச மனைப்பட்டா….!

தியாகிகள் கவுரவிப்பு சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் தியாகிகளை கவுரவிக்கும் விழா இன்று கம்பன் கலையரங் கத்தில் நடந்தது. விழாவிற்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தியாகிகளுக்கு உலர் பழங்கள் அடங்கிய தொகுப்பு, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- திட்டங்கள் தியாகிகள் போராடியதன் விளைவாகத்தான் நாம் 75 ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. இன்று உலகம் வியக்கின்ற அளவுக்கு நம்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் பெரிய வளர்ச்சியடைய வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். காரைக்கால் கடற்கரையில் கலைவிழா புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏராளமானோர் மருத்துவம், பொறி யியல் பட்டம் பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் பலர் பணியில் உள்ளனர். கல்வி, மருத்துவத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையும் வகையிலான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இலவச மனைப்பட்டா தற்போது தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விரிவாக ஆலோசனை நடத்தி ஓய்வூதியம் உயர்த்துவது உள்ளிட்ட தியாகிகளின் கோரிக்கைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். தியாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வல்லவன், செய்தி, விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் முதற்கட்டமாக 10 பேருக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. மற்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,418 தியாகிகளின் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா

Related Articles

Back to top button
Close
Close