fbpx
Others

புதுச்சேரி—25 கல்வி நிறுவன வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிப்பு…?

புதுச்சேரி முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 25 கல்வி நிறுவன வாகனங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 6 குழுக்கள் ஆய்வு மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும், புதுவை25 கல்வி நிறுவன வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிப்பு பகுதிக்குட்பட்ட கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்வது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் புதுவை மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரில் இனறு நடந்தது.இந்த சிறப்பு முகாமுக்காக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தராமராஜூ, பிரபாகர்ராவ், கலியபெருமாள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, பாலசுப்ரமணி, சீனிவாசன், ரவிசங்கர், சண்முகநாதன் மற்றும் அதிகாரிகளை கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 25வாகனங்களில் குறைபாடு அக்குழுவினர் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் முன்னிலையில் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 250 வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, கதவு பூட்டுகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, பர்மிட், டிரைவர்களின் பணிக்காலம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 25 வாகனங்களில் மேற்கண்ட வசதிகள் சரிவர இல்லாமல் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்குறைகளை ஒரு வாரத்துக்குள் சரிசெய்து கொண்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close