fbpx
Others

புதுச்சேரி —-ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்… S.P.வம்சீதரரெட்டி

புதுச்சேரி ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி கூறினார். குறைகேட்பு கூட்டம் புதுவை கிழக்குப்பகுதி காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரின் குறைகேட்பு கூட்டம் முத்தியால்பேட்டை லலிதா மகாலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், நாகராஜ், கார்த்திகேயன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் பலரும் கலந்துகொண்டனர். அப்போது போலீசார் பலரும் தங்களது குறைகளை தெரிவித்தனர். வாக்கி டாக்கி குறிப்பாக நகரப்பகுதியில் பணியாற்றும் போலீசார், தாங்கள் கிராமப்புறத்திலிருந்து பணிக்கு வருவதாகவும், தங்களில் பலருக்கும் சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் நேரத்துக்கு சரிவர சாப்பிட முடியாததால் தங்களை கிராமப்புறத்துக்கு மாற்றணே்டும் என்று கேட்டுக்கொண்டனர். – அணிவகுப்பில் பங்கேற்க திருக்கனூர் மாணவி தேர்வு மேலும் பல ஆண்டுகளாக ரோந்து போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதை அதிரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். காவல் நிலையத்தில் வாக்கி டாக்கி, வாகனங்கள் மிகவும் பழையதாக உள்ளது அதை மாற்றித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், பஸ் நிலையத்திலும் கண்காணிப்பு கேமிராக்களை நிறுவவேண்டும் என்றும் கூறினார்கள். அவர்களது குறைகளை கேட்டுக்கொண்ட போலீஸ் சூப்ரண்டு வம்சீதர ரெட்டி பேசியதாவது:- தொடர்ந்து கண்காணிப்பு போலீசார் ரோந்து பணியின்போது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ரோந்துப்பணியில் எந்த குறையும் இருக்கக்கூடாது. ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் நடமாட்டம் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மோட்டார்சைக்கிள்கள் தற்போது அடிக்கடி திருட்டு போகின்றது. இதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து விரைவாக கைது செய்யவேண்டும். கண்காணிப்பு கேமிராக்கள் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. போலீசார் தங்கள் உடல் நலனையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது தெரிவித்துள்ள குறைகளை படிப்படியாக களைய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close