fbpx
Others

புதுச்சேரி–ஜெகரட்சகன் திமுக எம்.பி-மருத்துவக் கல்லூரியில் I.T

 வரி ஏய்ப்புப் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை வீடு, சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் சூழலில்புதுச்சேரியிலும்   வருமான வரித்துறை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரிஅகரம்கிராமத்தில்உள்ளஅவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறுவதால்கல்லூரிக்குமாணவர்கள்யாரும்அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 5  பேர் கொண்ட வருமான வரித் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறுவதால் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.ஏற்கெனவே அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அமைச்சர். அதேபோல் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி. ஜெகரட்சகன் வீடு, சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close