Others
புதிய பிரத்யேக யுபிஐ வசதி ரிசர்வ் வங்கி – கவர்னர் தகவல்
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறுகையில் , “பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள்.
இந்த யுபிஐ வசதிக்கு ‘123பே”(123PAY) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பெற “டிஜிசாதி” (DIGISAATHI) என்ற பிரத்யேக திட்டமும் விரைவில் தொடங்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் பயனளிக்கும்.
இந்த “123பே” திட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடைய முடியும்” என அவர் தெரிவித்தார்.