fbpx
Others

புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு…

தலைமுறைகளுக்கு வழிகாட்டும் அம்பேத்கர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய் - Viduthalai Daily Newspaperதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றார். சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நேற்று பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில் புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், டிஜிபிக்கு பிறகு பொறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்ற வழிகாட்டுதல்களை விதித்து இருந்தது என்றும், இந்த வழக்கினை உதாரணமாக கொண்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close