புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனைஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இதற்குதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு,மாடு உள் ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்நேற்று கூடிய சந்தைக்கு.15 எருமைகள், 120 கலப்பின மாடுகள். 85 கன்றுக் குட்டிகள். 65 ஜெர்சிரகமாடுகள் மற்றும் சிந்து, நாட்டு மாடு உள்ளிட்ட வைகளை விவசாயிகள் விற்ப னைக்கு கொண்டு வந்தனர். இதில் எருமை மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையும், கலப்பின மாடு ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விலை போனது. ரூ.1 கோடிக்கு விற்பனைஜெர்சி மாடு ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், சிந்து மாடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், நாட்டு மாடுஒன்று ரூ.65 ஆயிரம் முதல் ரூ 75 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்று கள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனையானது.அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு /வரப்பட்டன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ.8 ஆயிரம் வரையும், செம்மறி ஆடு ஒன்று ரூ.9 ஆயிரம் வரையும் விற்பனையானது. ஆடுகள் ரூ.30 லட்சத்துக்கும். மாடுகள் ரூ.70 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.1 கோடிக்கு கால் நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் வியாபாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்