புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை…

.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வந்தனர்.12 எருமைகள், 110 கலப்பின மாடுகள், 95 கன்றுகள், 50 ஜெர்சிரகமாடுகள்மற்றும்சிந்து,நாட்டுமாடுஉள்ளிட்டவைகள்கொண்டுவரப்பட்டன.எருமைமாடு ஒன்று ரூ.17 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரையும், கலப்பின மாடுஒன்று ரூ.16 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையும் விலை போனது.ஜெர்சி மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், சிந்து மாடு ஒன்று ரூ.13 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், நாட்டு மாடு ஒன்று ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும் விற்பனையானது.வளர்ப்பு கன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை போனது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ.9 ஆயிரம் வரையும், செம்மறி ஆடு ஒன்று ரூ.8 ஆயிரம் வரையும் விற்பனையானது. ஆடுகள் ரூ.30 லட்சத்துக்கும், மாடுகள் ரூ.70 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ் குமார்