fbpx
Others

பீளமேட்டில் பல இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர் கைது..

கோவை மாவட்டம், பீளமேடு பகுதிகளில் அதிக அளவில் குட்கா பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்லே செய்து வருவதாக பீளமேடு போலிசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் பீளமேடு காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலிசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சித்ரா சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட 25 கிலோ குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்தார். அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போலிசார் ராஜஸ்தானை சேர்ந்த கணபத் (24) என்பது தெரியவந்தது. மேற்படி விசாரணையில் கோவில்பாளையம் அருகில் குடோன் வைத்துள்ளதாக தெரிவித்தான். அந்த குடோனை ஆய்வு செய்த போலிசார், அங்கு மூட்டை கணக்கில் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்த 1000 கிலோ குட்காவை பறிமுதல் செய்து அந்த நபரை சிறையில் அடைத்தனர். இதே போல கடந்த மாதம் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் சுமார் 500 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close