பிரேமலதா–சி.வி.சண்முகம்அநாகரிகமாகப் பேசியதுகண்டித்தக்கது….
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில்,சென்னையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் நடிகைக்கு எதிராக அநாகரிகமாக பேசியது கண்டித்தக்கது.எந்தப் பெண்ணாக இருந்தாலும் எந்த சாதி, மதமாக இருந்தாலும் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் அந்தக் கேள்வியை கேட்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பெண்களை இழிவு படுத்துவதை தயவு செய்து இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் கட்சிகள், சாதிகள்,மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை பெண்கள் சார்பாக நான் முன்னெடுப்பேன். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஒவ்வொரு பெண்ணும் இன்று குடும்பத்தின் ஆணிவேர். பெண்களை மதிக்கும் வகையில் தான் நாம், தாய் நாடு, குலதெய்வம் என்று சொல்கிறோம். பெண்களை இழிவுப்படுத்துவது யாராக இருந்தாலும் மிகவும் கண்டிக்கக் கூடியது. இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாதெரிவித்தார்.