fbpx
Others

பிரதமர் மோடி பயங்கர வேலையை செய்து வருகிறார்: அமெரிக்க EX ஜனாதிபதி

 நியூஜெர்சி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நியூயார்க் நகர் அருகே பெட்மின்ஸ்டர் பகுதியில் தனது கோல்ப் விளையாட்டு கிளப்பில் சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவரிடம் அதிபர் பைடன் அல்லது ஒபாமா போன்றவர்களை விட நீங்கள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறோம் என உணர்கிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் இதனை பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி டிரம்ப்பை விட ஒரு சிறந்த நட்புறவை கொண்ட நபரை நீங்கள் கொண்டிருக்க முடியாது என நான் நினைக்கிறேன் என பதிலளித்து உள்ளார். தொடர்ந்து அவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்தியபிரதமர் மோடி நல்ல, சிறந்த மனிதர்; பயங்கர வேலையை செய்து வருகிறார்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேட்டி சமூகத்தினரிடம் இருந்து தனக்கு கிடைத்த பெருத்த ஆதரவை பற்றியும் குறிப்பிட்டு பேசினார். நான், இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன். நாங்கள் அப்போதும், இப்போதும் நண்பர்களாக இருந்து வருகிறோம். அவர் ஒரு சிறந்த மனிதர் என நான் நினைக்கிறேன். ஒரு பயங்கர பணியை அவர் செய்து வருகிறார். அவருக்கு கிடைத்தது எளிமையான பணி அல்ல. ஆனால், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நீண்ட காலத்திற்கு அறிந்து வைத்திருக்கிறோம். அவர் ஒரு நல்ல மனிதர் என டிரம்ப் கூறியுள்ளார். 2-வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் அமெரிக்கா, இந்தியா என வரும்போது அவர் முக்கியத்துவம் அளிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவை எடுத்து கொண்டால், உங்களது சிறந்த பிரதமர் மற்றும் எனது நண்பரான மோடியின் கீழ் இந்தியா நன்றாக செயல்படுகிறது. அமெரிக்காவை எடுத்து கொண்டால், நாங்கள் சிறந்த பொருளாதார நிலையை நோக்கி செல்கிறோம். தற்போது உள்ள பொருளாதார நிலைமையை சீர் செய்து, மிக பெரும் பொருளாதார நாடு என்ற பழைய நிலைக்கு கொண்டு வரபோகிறோம். எனது காலத்தில் இருந்ததுபோன்ற பொருளாதாரம் ஒருபோதும் இருந்தது இல்லை. ஆனால், 2 ஆண்டுகளாக இல்லாத பொருளாதார நிலையை நாங்கள் மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை செய்வோம் என்று கூறினார். இதனால், 2-வது முறையாக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என்ற மறைமுக பதிலையும் அளித்துள்ளார். என்னை விட சிறந்த நண்பரை இந்தியா கொண்டிருக்கவில்லை என நான் நினைக்கிறேன். அதுபோன்ற உறவை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன். அதிபராக என்னை விட சிறந்த ஒரு நண்பர் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close