fbpx
Others

பிரதமர் மோடி-தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவே வளரும்.

பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி, சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில்  வணக்கம் தமிழ்நாடு என்று கூறி தமது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. புதிய ஆற்றல் புதிய நம்பிக்கைளுக்கு ஆரம்பம் இது. சாலை, ரயில் திட்டம் புத்தாண்டு உற்சாத்தை அதிகரிக்கும்” என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், “டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பொருத்தவரையில் நாம் தான் உலகத்திலேயே முதலிடத்தில் இருக்கிறோம். உலகின் விலை மலிவான மொபைல் டேட்டா நம்மிடம் தான் உள்ளது. 6 லட்சம் கிலோ மீட்டருக்கு மேற்பட்ட கண்ணாடி இலை நார்(Optical fibre cable) போடப்பட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இது இணைக்கிறது. இன்று தொடங்கி வைத்த திட்டங்கள் வருவாயை உயர்த்தும்.” என்றார்.   தமிழகத்திற்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசுகையில், “ஒவ்வொரு திட்டமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்துக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.கடந்த சில நாட்களில் சில முக்கிய திட்டங்களை தமிழ்நாடு கண்டுள்ளது. பாதுகாப்பு தொழில்துறை இந்தியாவில் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு வேலைகளை உருவாக்கவும் செய்கிறது. அண்மையில் பெரிய ஜவுளி பூங்கா தமிழகத்தில் தொடங்கப்பட்டது. அது தமிழகத்தில் ஜவுளி தொழிலுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு பெங்களூரு விரைவுச் சாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு பல்முனை ஏற்பாட்டு பூங்கா கட்டுமான பணி மாமல்லபுரத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை ஆனது பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் பளபளத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சென்னைக்கு கிடைத்துள்ளது. வந்தே பாரத் ரயிலால் கோவைக்கு 6மணி நேரத்தில் செல்லலாம்.  தமிழ்நாடு இந்தியாவை இயக்கும் என்ஜின்களில் ஒன்று. எனவே தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவே வளரும் என்று பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close