fbpx
Others

.பிரதமர் மோடி– சந்திப்பு பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி.

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக நேற்று காலை 10.30 மணிக்கு முதுமலைக்கு வந்தார். பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்தித்து பேசினார். மேலும் அதே ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளை சிறப்பாக பராமரித்து உள்ளதாக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது பொம்மன் தோளில் தனது கையை வைத்திருந்தார். இதனால் பாகன்பிரதமர் மோடியுடன் பேசிய அனுபவங்களை பகிர்ந்த பாகன் பொம்மன்-பெள்ளி தம்பதியினர்..! தம்பதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர் .பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி கூறியதாவது:- எங்களை பார்க்க பிரதமர் மோடி வர உள்ளதாக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தனர். நாட்டின் பிரதமரே நேரில் வந்து சகஜமாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. காரில் இருந்து இறங்கி வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் கொடுத்தார். எங்களை பார்த்த உடனே நேரில் வந்து பேசினார்.அப்போது ரகு, பொம்மி ஆகிய குட்டியானைகளுக்கு கரும்புகள் வழங்கியவாறு, அவைகளை எப்படி பராமரித்தீர்கள், உங்களுடன் எப்படி பழகியது என்று கேட்டார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குழந்தைகளை போல் வளர்த்ததாக தெரிவித்தோம். அதற்கு அவர், நீங்கள் வளர்த்த விதத்தை நீங்கள் இடம் பெற்ற ஆவணப்படத்திலேயே பார்த்தேன் என்றார். அப்போது பெள்ளியிடம், உங்களுக்கு எந்த குட்டி யானை பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு பொம்மி தான் பிடிக்கும் என்று கூறினார். பொம்மனிடம் கேட்டபோது, 2 குட்டிகளும் பிடிக்கும் என்று கூறினார். இதை கேட்டு அவர் சந்தோஷப்பட்டார். மேலும் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு குட்டி யானைகளை சிறப்பாக பராமரித்ததாக பாராட்டினார். தொடர்ந்து ஆவணப்படங்கள் இன்னும் எடுக்க உள்ளார்கள் என்று வேடிக்கையாக பேசினார். பின்னர் எங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் உங்களுடன் நீண்ட நேரம் இருந்து பேசுவதற்கு ஆசையாக உள்ளது. இருந்தாலும், இன்னும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் இங்கிருந்து செல்ல வேண்டி உள்ளது என்று கூறினார். தொடர்ந்து உங்களுக்கு என்ன தேவைகள் உள்ளதோ, அதை அதிகாரிகள் நிறைவேற்றி தருவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். கணினி வசதி அப்போது நாங்கள், எங்களுக்கென்று எதுவும் வேண்டாம். எங்கள் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டி தர வேண்டும். சாலைகள், நடைபாதைகள் அமைத்து தர வேண்டும். மேலும் பள்ளிக்கூடத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும். 10, 12-ம் வகுப்பு படித்த பிள்ளைகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டோம். இதை கேட்ட பிரதமர் மோடி, கலெக்டரிடம் கூறுங்கள், அவர் உடனடியாக செய்து தருவார். இல்லையெனில் உங்களுக்கு தேவையானதை நான் செய்து தருகிறேன் என்று கூறினார். பின்னர் நீங்கள் 2 பேரும் டெல்லிக்கு வர வேண்டும் என்றார். அப்போது நான்(பெள்ளி) வரவில்லை. அவர் (பொம்மன்) வருவார் என்று தெரிவித்தேன். இல்லை கண்டிப்பாக டெல்லிக்கு வர வேண்டும் என்று கூறினார். இதுவரை டி.வி.யில் பார்த்த நிலையில் பிரதமரே நேரில் வந்து பாராட்டியது பெருமையாக இருக்கிறது, சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

 

Related Articles

Back to top button
Close
Close