fbpx
Others

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்…?

CM Stalinதமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின், நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவை தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் தந்துள்ளீர்கள். 2026 சட்டசபைத் தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை கொடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி என்றால் செயல் வீரர் என்று அர்த்தம். நினைத்ததை சாதித்து காட்டுபவர். அதனால் தான் கோவையில் நிற்கிறார். எந்த வேலையை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்பவர். அதேபோல் கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. அந்த தேர்தலில் 40க்கு 40 வென்றோம். இப்போதும் அடித்து சொல்கிறேன். அவர் வந்தால் திமுகவின் 200 தொகுதி இலக்கு உறுதியாகிவிடும். போதிய மக்கள் தொகை இல்லை எனக் கூறி மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு, ஆளே இல்லாத கடைசியில் டீ ஆத்துவது போல், ஆக்ரா நகரில் ஆளிக்காமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது, தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார். அவர் வகிக்கும் பதவிக்கு இது தகுதியான பேச்சா இது? தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வரப் போகிறீர்கள். பீகாரில் பேசிய வார்த்தைகளை தைரியம் இருந்தால் பிரதமர் மோடி சொல்வாரா? தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழிக், மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கிறார்கள். தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்விஅமைச்சர்பேசினார்.ஒடிசாவிலும்தமிழர்களைஎப்படியெல்லாம்அசிங்கப்படுத்தினார்க   கள்.. அதனை மறக்க முடியுமா? நம்மை கேவலப்படுத்தி விளம்பரங்களை வெளியிட்டார்கள். பூரி ஜெகன்நாத் கோவிலின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டது என்று தமிழர்களை திருடர்களாக சித்தரித்து பேசினார். தமிழர்கள் கர்நாடகா வந்து வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று பாஜக அமைச்சர் பேசிவிட்டு, எதிர்ப்பு கிளம்பிய பின் மன்னிப்பு கேட்டார். இதன் காரணமாகவே பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதுதான் பாஜகவின் உண்மையான குணம். தமிழ் மீது பாஜகவுக்கு வெறுப்பு ஊறிப்போயிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close