fbpx
Others

பிரதமர்-புதிய விமான நிலைய முனையம் திறப்பு

புதிய விமான நிலைய முனையம் திறப்பு.

சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் 1,260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில்அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்த திறப்புவிழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்றனர். .இதையடுத்து புதிய விமான முனையத்தை முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது பிரதமரின் கையைப்பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தட்டிக் கொடுத்தார்.திறன் அதிகரிக்கப்பட்ட முனையம் மூலம் ஆண்டுதோறும் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை சென்னை விமான நிலையம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக  பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில், முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, வரவேற்றார். அப்போது  அ.ராமசாமியின் ’தமிழ்நாட்டில் காந்தி’  (Gandhi’s Travels in Tamil Nadu) என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூலை  பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close