Others
பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா. ஜ. க.சிறுபான்மை அணி சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு விநாயகர் சிலையை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சியை ஆவடி வடக்கு மண்டலில் மாவட்ட தலைவர். அஸ்வின் இராஜசிம்ம மகேந்திரா அவர்கள் தொடங்கி வைத்தார்.சிறுபான்மை அணி மாவட்ட பொதுச் செயலாளர்.நசீர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர்.அப்துல் கரீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர். கராத்தே சங்கீதா ,மண்டல் தலைவர்.வினோத்குமார்,பொதுச்செயலாளர் மின்னல் பிரபு மற்றும் ஆவடி வடக்கு மண்டல் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநாயகர் சிலையை வழங்கினார்கள்.