Others
பாஸ்ட் டேக்கில் ₹3,000 ரீசார்ஜ்.. 200 முறை பயணிக்கலாம்
கார், வேன் போன்ற வர்த்தகம் சாராத தனிநபர் வாகனங்களுக்கு புதிய பாஸ்ட் டேக் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது வரும் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, ₹3,000 ரீசார்ஜ் செய்தால், ஓராண்டு முழுவதும் (அ) 200 முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பணச் செலவு மிச்சப்படும் எனக் கூறப்படுகிறது.