பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சமுத்திரம் உட்பட பல படங்களில் நடித்தவர் மனோஜ் கே பாரதி. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான இவர் இன்
று காலமானார். அமராவதி: நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும்தெரிவித்துக்கொள்கிறேன்.பிரபலஇயக்குநர்பாரதிராஜாவின்மகன்மனோஜ்பாரதிராஜாவின் திடீர்மரணச்செய்திஅறிந்துநான்அதிர்ச்சியடைந்தேன். மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதே வேளையில், இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது. திரு.பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.