fbpx
Others

பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்டஆலோசனைக் கூட்டம்.

      தேனிமாவட்டம்போடிநாயக்கனூர் – இராசிங்காபுரத்தில் 10/01/2024  காலை 11.00 மணியளவில் பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அ.ந.வீரசிகாமணி – மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர் அவர்கள் தலைமையில்,  K.V. முருகன் – தேனி மாவட்ட செயலாளர்  முன்னிலையில், . கா.காமாட்சி  வரவேற்புரையுடன், சிறப்பு விருந்தினர்.அ. பரமேஸ்வரன், மாநில பொருளாளர்.திருமதி வள்ளி , மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர் திரு. முத்துக்கிருஷ்ணன்  சிறப்புரை ஆற்றினார்கள், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட பத்து தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் – 1, தேனி மாவட்ட நிர்வாகமே ! பொதுப்பணித்துறையே ! தேனி இராஜ வாய்க்காலை உடனே சீர்படுத்தி கொட்டக்குடிஆறு, மீறு சமுத்திரக் கண்மாய் உபரிநீர் தாமரைக் குளம் வரை சென்றடைய வழி செய்ய வேண்டும். தீர்மானம் – 2, தேனி மீறு சமுத்திரக் கண்மாய் கரையை அகலப் படுத்தி,தேனிபுறவழிச்சாலையையும், பெரியகுளம் சாலையையும் இணைத்திடு, தீர்மானம் – 3, கல் குவாரிகள் தூசிகளாலும், லாரிகளாலும், m. sand தூசிகளாலும், விளைநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது, அவ்வாறு உள்ள கல் குவாரிகளை உடனடியாக தடை செய், தீர்மானம் – 4, நன்செய் நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி அவ்விடத்தினை வீட்டடிமனைகளாக மாற்றி கொள்ளை லாபம் அடிக்கின்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் உள்ள விளைநிலங்களை கையகப் படுத்தி சிறு குறு விவசாயிகளிடம் ஒப்படைப்பு செய், தீர்மானம் – 5, தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள விவசாயம் செய்யாதிருக்கும் அனைத்து நிலங்களையும், விவசாயம் செய்யும் விவசாயக்கூலிகளுக்கு ஒப்பந்த முறையில் கொடுத்திடு, தீர்மானம் – 6, அரசு அளிக்கும் வேளாண் மானியங்களையும், பிற சலுகைகளையும் மக்கள் அறியும் வண்ணம் வெளிப் படுத்தி விழிப்புணர்வு உண்டாக்கிடு, தீர்மானம் – 7, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை தவிர்த்திடு ஏனெனில் நீர்ப் பாசன முறை பெரிதும் பாதிக்கிறது, தீர்மானம் – 8, வைகையாற்றின் குறுக்கே கண்டமனூருக்கு மேலே ஒரு அணைகட்டி ஆண்டிபட்டி வரை பாசன வசதியை ஏற்படுத்திடு, தீர்மானம் – 9, நூறு ( 100 ) நாட்கள் வேலைத் திட்டத்தை முறைப் படுத்தி 200 நாட்கள் வேலைத் திட்டமாக்கிடு, தீர்மானம் – 10, குரங்கனியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரை போக்குவரத்து அமைத்திடு…. போன்ற பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் திரு. வீர அழகு நன்றியுரையுடன் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவு பறிமாறப்பட்டு ஆலோசனைக் கூட்டம் இனிது நிறைவு பெற்றது..

Related Articles

Back to top button
Close
Close