fbpx
Others

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்…

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறும் – ஆற்காட்டில் அன்புமணி பேச்சு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், உரிமை மீட்க தலைமுறை காக்க எனும் தலைப்பில் மேற்கொண்டார். ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி இப்பயணம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது காமராஜர்சிலைஅருகேஅமைக்கப்பட்டிருந்த மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசினார் இந்நிகழ்விற்கு பாமக மேற்குமாவட்டசெயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எல் இளவழகன், தலைமை தாங்கினார்அன்புமணி பேசுகையில் தமிழகத்தில் தற்போது இருக்கும் திமுக ஆட்சியில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், என்ற பெயரில் திட்டங்களை துவக்கி வைத்து நாடகம் நடத்தி கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை எனவும், இந்தத் திட்டங்களால் யார் நலத்தை முதலமைச்சர் காக்க போகிறார், மது ஆலைகளையும், மது ஆலைகளில் முதலாளிகளையும், அதிலும் திமுக அமைச்சர்களின் மறைமுக தொடர்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து மதுபான ஆலைகளின் நலனைக் காக்க மட்டுமே திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.பின்னர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறிவிடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை, எனவே தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் ராணிப்பேட்டை மாவட்ட வன்னியர் சங்க தலைவர் அ.ப. லட்சுமணன், ஆற்காடு நகர செயலாளர் சி. கார்த்திகேயன் & மார்க்கெட் பாஸ்கர்,முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஏ கே. திருமுருகன் EX.MC, முன்னாள் நகர செயலாளர் ஏ.பி.டி பாலா EX .MC, முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ம.பழனி, ஆற்காடு நகர தலைவர் சி.சஞ்சீவிராயன், ஆற்காடு நகர அமைப்புச் செயலாளர் பா.சுரேந்தர், பகவான் கார்த்தி, பிரபாகரன், அமுத சிவா, கணேசன், கார்த்திகேயன், செல்வி ரமேஷ் MC, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில, மாவட்ட,நகர, ஒன்றிய, முக்கிய பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள், தொண்டர்கள் என திரலானோர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close