பாகிஸ்தான்– ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படை..

ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படையொன்றை உருவாக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான மோதலுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவுடனான அண்மைய மோதலை நினைவுகூரும் வகையில், இஸ்லாமபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், கருத்துரைக்கும் போதுபாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இதனை அறிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய இந்த படை, பாகிஸ்தான் இராணுவத்தின்திறனைவலுப்படுத்துவதில்ஒருமைல்கல்லாகுமெனஅவர்குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், குறித்த படை, இந்தியாவை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படுகின்றமை தெளிவாகப்புலப்படுவதாக,பாகிஸ்தானியபாதுகாப்புஅதிகாரிஒருவர்தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகநிலவும்போட்டித்தன்மையின்பின்னணியில், இரண்டு நாடுகளும் தங்களது இராணுவ திறன்களை மேம்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.