fbpx
Others

பாகிஸ்தானில் தற்போது இரவு நேர லாக் டவுன் அமல்….

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல் | Restrictions to be imposed in Pakistan from today to deal with fuel shortageஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, திடீரென பிப்ரவரி 28-ம் தேதி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது. இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஈரான், சரியான பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இதையடுத்து, நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து, தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், இன்று இரவு அந்நாட்டைமுழுவதுமாகஅழிப்போம்என்றுட்ரம்ப்இறுதிஎச்சரிக்கைவிடுத்துள்ளார்.இதனிடையே, போர் தொடங்கிய சில நாட்களில், உலகின் முக்கிய கடல் எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், அங்கிருந்து உலகம் முழுவதும் செல்லும் 20 சதவீத கச்சாஎண்ணெய்போக்குவரத்துபாதிக்கப்பட்டது.இதையடுத்து, இலங்கை,பாகிஸ்தான்,நேபாளம்,வங்கதேசம்உள்ளிட்டநாடுகளில்கடும்எரிபொருள்தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.இந்தியாநடுநிலையாகஇருந்து,ஈரானுடன்நட்புபாராட்டிவரும்நிலையில்,இந்தியகப்பல்கள்தடையின்றிவந்துகொண்டிருக்கின்றன.தற்போதுவரை9கப்பல்கள்இந்தியாவிற்கு வந்துள்ளன.இதனிடையே, எரிபொருள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பாகிஸ்தானில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால், கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 137 ரூபாயிலிருந்து 458 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 80 ரூபாயை குறைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்தார். அதனால், தற்போது அங்கு பெட்ரோலின் விலை 378 ரூபாயாக உள்ளது.மேலும், பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே விதித்துள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட சூழலில், எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், தற்போது பகுதியளவுபொதுமுடக்கத்தை, அதாவது இரவு நேரலாக்டவுனைபாகிஸ்தான்அரசுஅறிவித்துள்ளது.முன்னதாக, பகுதி அளவில் பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இரவு நேர பொது முடக்கம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும்.உணவகங்கள், திருமண மண்டபங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.மறு அறிவுப்பு வரும் வரை, இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதனிடையே, அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில், எகிப்து, துருக்கி நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close