பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடியில் நலத்திட்ட பணிகள் .. spl. news
பவானிசாகர் தொகுதியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை நீலகிரி எம்பி ராசா தொடங்கி வைத்து பொது மக்களின் குறைகளை கேட்டார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக துணைச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா எம்பி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தாளவாடி மலை பகுதி கொங்கள்ளி காலனி பகுதியில் நடமாடும் நியாயவிலை கடமையையும்,சோளகர் தொட்டி பகுதியில் நடமாடும் நியாயவிலை கடமையையும்,திகினாரை ஊராட்சியில் புதிய நியாய விலை கடையையும் திறந்து வைத்தார். தொடர்ந்துகுண்டு குழியுமாக இருந்த தாளவாடி – ஒசூர் புதிய தார் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். தாளவாடியில் புதிய ரேசன் கடை திறப்பு விழாவும், தாளவாடி உள்ள நடுநிலைப்பள்ளிக்கு டெஸ்க் களையும் வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசியவர் தாளவாடி மலை பகுதிக்கு தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இப்போ இவர்களின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ள கல்லூரி தொடங்கப்பட்டது . தில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி முதல்வர் உதவி பேராசிரியர் தேவை எனக் கேட்டுள்ளார். இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து கேர்மாளம் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் உயர்நிலைப்பள்ளி வரை பேவர் பிளாக் தளம் சிமெண்ட் கல் பதித்தல் சாலையை திறந்து வைத்தும்,திங்களுர் ஊராட்சி பாசக்குட்டையில் புதிய பேருந்து நிறுத்த கட்டிடம் திறந்து வைத்தும்,திங்களுர் ஊராட்சி காடட்டியில் புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தையும்,குத்தியாலத்தூர் ஊராட்சி ஏலஞ்சி கிராமத்தில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும்,பவளக்குட்டையில் சமுதாயக்கூடம் பார்வையிட்டார். தொடர்ந்து சத்தி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்டசொல்லிக்குட்பட்ட
கே.என்.பாளையத்தில் நியாயவிலை கடை புதிய கட்டிடத்தையும்,சதுமுகை ஊராட்சி சின்னட்டி பாளையத்தில் நியாயவிலை கடை புதிய கட்டிடம் திறந்து வைத்தார். பின்
சத்தியமங்கலத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.மாதம்பாளையத்தில் உள்ள பவானிசாகர் தெற்கு கழக செயலாளர் இல்லத்திற்கு சென்று அவரு தந்தையின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தாளவாடி ஒன்றிய செயலாளர் சிவாண்ணா, பற்றி நகரச் செயலாளர், நகர மன்ற தலைவர் ஜானகிராமசாமி, சத்தி ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் இளங்கோ, ஒன்றிய செயலாளர் தேவராஜ் மற்றும் பேரூர் கழகம், ஒன்றியம், நகரம் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர்.ஈரோடுமாவட்டம்
SKT சுரேஷ்குமார்