பவானிசாகர் அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் உட்பட்ட பகுதியில் சத்தி – மேட்டுப்பாளையம் ரோட்டில் சேலம் மாவட்டம்,மேச்சேரி,கோல்காரனூரைச் சேர்ந்த சுகுமார் மகன் தர்னிஷ் சாய் க்ரசாத் (21)தர்னிஷ் சாய் க்ரசாத் இவர் ஊட்டியில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ ப்ரொபஷனல் போட்டோகிராப் படித்து வருகிறார். சேலம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தனது சொந்த ஊரான மேச்சேரிக்கு செல்ல வேண்டி காரில் நேற்று மேட்டுப்பாளையம் – சத்தி ரோட்டில் சென்றுள்ளார். கார் பெரிய கள்ளிப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி அருகே இருந்த மரத்தில் மோதி நொறுங்கியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் எவ்வித பாதிப்பும் இன்றி மாணவர்களுக்கு உயிர் தப்பினார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்