fbpx
Others

பழங்கால கார்கள்- கோவையில் இருந்து ஊட்டிக்கு அணிவகுப்பு.

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் பழங்கால, பழமையான பாரம்பரியமிக்க கார் மற்றும் பைக்குகளை புதுப்பித்து, காட்சிப்படுத்தி வருகிறது. அதன்படி, ‘கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ் 2023’ என்ற கார் கண்காட்சி பயணம் கடந்த 5ம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையில் இருந்து பழங்கால கார்கள் அடங்கிய குழுவினர் நேற்று கோவை வந்தடைந்தனர். இந்த கார்கள் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி. நாயுடு கார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். பலர் பழைய மாடல் பாரம்பரிய கார்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.   இதில், 1949ம் ஆண்டு மாடல் புய்க் சூப்பர்-8 கார், 1951ம் ஆண்டு ெசவர்லட் ஸ்டைலின் கார், 1945ம் ஆண்டு சிட்ரான் ஹாட் ராடு கார், 1966ம் ஆண்டு வோல்ஸ்வாகன் பீட்டில் கார் உள்பட 20 கார்கள் இடம் பெற்றிருந்தன. அனைத்து கார்களும் நல்ல கன்டிஷனில் இருந்தது. கோவை ஜிடி நாயுடு கார் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் நேற்று மதியம் 1 மணியளவில் புறப்பட்டு ஊட்டிக்கு சென்றது. இந்த ஊட்டிக்கான பயணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஊட்டி வரை சாலையில் அணிவகுத்து சென்ற கார்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close